10 நிமிடம் முன்னதாக விடப்படும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி: மாணவிகள் மகிழ்ச்சி

10 நிமிடம் முன்னதாக விடப்படும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி: மாணவிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10 நிமிடம் முன்னதாக விடப்படுவதால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குமாரபாளையம் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது.

இதில் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில், கழிப்பிடம் சுற்றுச்சுவர் உயரம் அதிகரிக்க செய்ய வேண்டும், ஆண்கள் மேல்நிலை பள்ளி விடுவதற்கு 15 நிமிடம் முன்னதாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடவேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, தற்போது தினமும் 10 நிமிடம் முன்னதாக பள்ளி விடப்பட்டு வருகிறது.

இது குறித்து தலைமை ஆசிரியை சிவகாமி கூறுகையில், 10 நிமிடம் முன்னதாக விடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததுதான். அலாரம் பழுதின் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் அடிக்காததால், ஒரே சமயத்தில் விடும்படி ஆகியுள்ளது.

தற்போது அலாரம் பழுது நீக்கப்பட்டு 10 நிமிடம் முன்னதாக பள்ளி விடப்படுகிறது. இதனால் மாணவிகளும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் எளிதில் வீட்டிற்கு செல்ல முடிகிறது. இது பெற்றோர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

Tags

Next Story