குமாரபாளையத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் பொதுக்குழு கூட்டம்

குமாரபாளையத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வரவு, செலவு கணக்கு சமர்பித்தல், புதிய உறுப்பினர் சேர்த்தல், நிர்வாகிகள் மாற்றம் ஆகியன நடந்தது. சமுதாய பயிற்றுனர்கள் நாராயணி, தமிழரசி, முரளி, ரவி இந்த கூட்டத்தினை வழிநடத்தினர். சிறந்த மகளிர் குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகி மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுவரை சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படாத மக்களிடையே குழுக்கள் அமைப்பதும், சுய உதவிக்குழுவில் இதுவரை இணைக்கப்படாத மகளிரை குழுக்களில் இணைப்பதும் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திருநங்கைகள், நலிவுற்றோர் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் ஆகியோரை சிறப்புக் கவனம் செலுத்தி சுய உதவிக்குழுக்களின் சேர்ப்பது நோக்கமாகும். ஒத்த கருத்துடைய ஏழை மகளிர் தாமாகவே முன் வந்து தங்கள் வளர்ச்சிக்காக ஒன்று சேர்ந்து சேமிப்பினை பெருக்கிடவும், குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு குறிப்பிட்ட தொகையினை வாரம் அல்லது மாதந்தோறும் சேமித்து தங்களுக்குள்ளேயே சிறுகடன் கொடுத்து உதவிக்கொள்ளும் ஒரு சிறு குழு அமைப்பதே சுய உதவிக்குழுக்களின் பணியாக உள்ளது.
குழு உறுப்பினர்கள் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இக்குழுவில் 12 லிருந்து 20 மகளிர் உறுப்பினர்களாக இருக்கலாம்.
அந்தந்த ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளை அணுகி புதிய மகளிர் சுய உதவிக்குழு அமைக்கலாம் என்பதும் இதன் விதிமுறையாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu