குப்பைகளால் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு

குப்பைகளால் போக்குவரத்து   போலீஸ் ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு
X

குமாரபாளையம் அருகே குப்பைகளால் போக்குவரத்துபோலீஸ் ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது

குமாரபாளையம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அருகே குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது

குமாரபாளையம் அருகே குப்பைகளால் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அருகே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கோட்டைமேடு மேம்பாலம் அருகே போக்குவரத்து போலீசாரின் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இதனருகே அப்பகுதியினர் குப்பைகள் மலை போல் கொட்டி வைத்துள்ளனர். பல நாட்களாக குப்பைகள் அகற்றபடாததால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கடையினர், குடியிருப்பு வாசிகள் இந்த துர்நாற்றத்தால் இருக்க முடியாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை சொல்லியும் எவ்வித பலனும் இல்லை என கூறப்படுகிறது. பலருக்கும் அவதியை ஏற்படுத்தும் இந்த குப்பையை உடனே அகற்றவும், மேலும் இனி இந்த இடத்தில் குப்பைகள் கொட்ட அனுமதி கொடுக்காமலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் மற்றும் அப்குதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி