குமாரபாளையத்தில் விரைவில் குப்பை கிடங்கு: நகர்மன்ற தலைவர் உறுதி

குமாரபாளையத்தில் விரைவில் குப்பை கிடங்கு: நகர்மன்ற தலைவர் உறுதி
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் விஜய்கண்ணன் கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

குமாரபாளையத்தில் 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குப்பை கிடங்கு அமைக்க நகர்மன்ற தலைவர் உறுதி கூறியுள்ளார்.

குமாரபாளையத்தில் 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குப்பை கிடங்கு அமைக்க நகர்மன்ற தலைவர் உறுதி கூறியுள்ளார்.

குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் விஜய்கண்ணனை கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், சியாமளா, பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் தங்கள் பகுதி குறைகள் குறித்து புகார் கூறினர். இது பற்றி அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். விஜய்கண்ணன் கூறியதாவது:

அனைத்து வார்டுகளிலும் தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாத குப்பை கிடங்கு அமைக்க வேண்டும். நமது நகரில் ஒரு நாளைக்கு 16 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவைகளில் 5 டன் மட்டுமே சின்னப்பநாயக்கன்பாளையம், மணிமேகலை தெருவில் உள்ள தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுரமாக்கப்படுகிறது. மீதமுள்ள குப்பைகளில் 6 டன் அனைத்து வார்டுகளில் உரங்கள் தயாரிக்க வைக்கப்பட்ட கருப்பு பேரல்களில் சேகரிக்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் குப்பை சேர்ந்து கொண்டே இருப்பதால் குப்பை கிடங்கு அமைக்க இடம் ஆய்வு செய்து, குப்பை கிடங்கு விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture