குமாரபாளையம் அருகே சாலையில் குப்பை, கோழிக்கழிவுகள்: சுகாதார சீர்கேடு அவலம்

குமாரபாளையம் அருகே சாலையில் குப்பை, கோழிக்கழிவுகள்: சுகாதார சீர்கேடு அவலம்
X

உப்புபாளையம், சங்ககிரி சாலையில் குப்பை, கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. 

குமாரபாளையம் அருகே சாலையில் குப்பை, கோழிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உப்புபாளையம், சின்னார்பாளையம், தனியார் பள்ளி ஆகிய பகுதிகளின் அருகே குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகளை மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனை நாய்கள், பறவைகள் என சாலையின் நடுவே வீசிச் சென்று விடுகிறது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பழைய பேப்பர், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்போர் இங்கு தீ வைத்துவிட்டு செல்வதால் எழும் கரும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள், அருகே உள்ள குடியிருப்பு வாசிகள், வியாபார நிறுவனத்தார் ஆகியோர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல பாதிப்புகள் உடலளவில் ஏற்படுகின்றன.

எனவே இதனை தவிர்க்க இந்த பகுதிகளில் குப்பைகளை போட தடை விதித்தும், மீறி கொட்டுவோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!