குமாரபாளையத்தில் கஞ்சா விற்றதாக 3 பேர் கைது

குமாரபாளையத்தில் கஞ்சா விற்றதாக  3 பேர்  கைது
X
குமாரபாளையத்தில், கஞ்சா விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே வட்டமலை, சத்யா நகர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ.க்கள் மலர்விழி, நந்தகுமார், சேகரன், சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நபர்களை கையும், களவுமாக பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் வட்டமலையை சேர்ந்த மிராண்டா செந்தில், 42, சத்யா நகரை சேர்ந்த முருகன், 21, கவுதம்,21, என்பதும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!