குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை துவக்கம்

குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள்   விற்பனை துவக்கம்
X

குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

Vinayagar Silai - குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

Vinayagar Silai -ஆகஸ்டு 31 ம்தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் விற்பனை குமாரபாளையத்தில் துவங்கியுள்ளது. இது குறித்து டி.எஸ்.பி. மகாலட்சுமி கூறியதாவது:-

குமாரபாளையத்தில் கொரோனவிற்கு முன் கடந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு போலீஸ் அனுமதியுடன் விநாயகர் சிலை கொலு வைத்து வழிபட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கபட்டுள்ளது. புதியதாக வைக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதிகாரிகளின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கபடும். விநாயகர் சிலை உயரம் 10 அடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த அளவில்தான் சிலை வைத்து வழிபட வேண்டும். போலீஸ் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிலை வைத்து வழிபடும் குழுவினரும் கூட இருந்து கவனித்து கொள்ள வேண்டும். அதிக பட்சம் 3 நாட்கள் மட்டுமே சிலைகள் கொலு வைத்து வழிபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai robotics and the future of jobs