/* */

குமாரபாளையம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக கணேசன் பொறுப்பேற்பு

குமாரபாளையம் நகராட்சியின் பொறுப்பு கமிஷனராக திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி பொறுப்பு கமிஷனராக கணேசன் பொறுப்பேற்பு
X

குமாரபாளையம் நகராட்சியின் புதிய கமிஷனராக திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, சேர்மன் விஜய்கண்ணன் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

குமாரபாளையம் நகராட்சி கமிஷனராக பணியாற்றிய வந்த விஜயகுமார் பணியிட மாறுதலில் சென்றார். அவருக்கு பின் இரு மாதங்களாக புதிய கமிஷனர் நியமனம் செய்யப்படாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது திருச்செங்கோடு நகராட்சி கமிஷனர் கணேசன், குமாரபாளையம் நகராட்சியின் பொறுப்பு கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் செல்வராஜ், செந்திகுமார், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மூலிகை பொருள் விற்பனை மையம் துவக்கம்

தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை சார்பில் தயார் செய்யப்படும் தேன், சாமை, திணை, ஊறுகாய் மற்றும் செடி வகைகள், மூலிகை பொருட்கள் விற்பனை செய்வதற்கு டான் ஹோடா விற்பனை மையம் திறப்பு விழா நடைபெற்றது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுகன்யா தலைமை வகிக்க, நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று இந்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், கோவிந்தராஜ், இனியா ராஜ், நிர்வாகிகள் கதிரேசன், விக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார். அறிவு சார் மையம், தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி, கோம்பு பள்ளம் சீரமைப்பு பணி, பழைய பள்ளிபாளையம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். வாரச்சந்தை சீரமைப்பு பணி, பேருந்து நிலைய சீரமைப்பு பணி, தூய்மை பணியாளர்கள் புதிய குடியிருப்பு கட்டுதல், பாதாள சாக்கடை திட்டம், 33 வார்டுகளில் வடிகால் மற்றும் தார்சாலை வசதி ஆகியவற்றிற்கான கோரிக்கை மனுவினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் வழங்கினார். இந்த ஆய்வில் நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரன், கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

40 கிலோ கேரி பேக் பறிமுதல்

குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் நகரில் உள்ள ஜவுளிக்கடை, டீக்கடை, மளிகை கடை, பேன்சி பொருட்கள் கடை, ஓட்டல் கடை உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் கேரி பேக் 40 கிலோ பறிமுதல் செய்ததுடன் 6 ஆயிரத்து 100 ரூபாய் அபாரதம் விதித்தனர். இதில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன், உதவி பொறியாளர் கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஸ்மார்ட் வகுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி, நகராட்சி பள்ளிகளின் தரம் உயர்த்தி டிஜிடல் முறையில் கற்பிக்கும் முறையை மேம்படுத்த குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம்,மேற்கு காலனி, நாராயண நகர், புத்தர் தெரு ஆகிய நகராட்சி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் முயற்சியினால் ஸ்மார்ட் வகுப்பு கொண்டுவரப்படவுள்ளது. ஸ்மார்ட் வகுப்பு நடத்தும் முறை குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர் வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், ஞானசேகரன், ஹரி பாலாஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த சேர்மன்

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் உணவு குறித்து கேட்டறிந்தார். பணியாளர்களிடம் அம்மா உணவகத்திற்கு தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தார். ஏழை மக்கள் உணவருந்த வரும் நிலையில், அவர்களுக்கு அன்புடன் உணவு பரிமாற அறிவுறுத்தினார்.

குமாரபாளையம் அம்மா உணவகத்தில் நீராவி கொதிகலன் செயல்பாட்டினை சேர்மன் ஆய்வு செய்தார்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், கடந்த ஆட்சியில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படவேண்டுமென்ற அறிவுறுத்தலின்படி, குமாரபாளையம் அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதிய வேளையில் மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பழுதடைந்த நீராவி கொதிக்கலன் மற்றும் வெட் கிரைண்டர் புதிதாக பொருத்தும் பணி மற்றும் சமையல்கூட பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் ஓ.ஏ.பி.க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஓ.ஏ.பி. பெற தகுதி உள்ளவர்தானா? என சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜானகி தீவிர விசாரணை செய்து, உரிய நபர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி நகராட்சி சேர்மனிடம் முதியோர் பலர் ஓ.ஏ.பி. விண்ணப்பங்கள் கொடுத்து உதவி கேட்டு வருகின்றனர். இவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு பரிசீலித்து ஓ.ஏ.பி. ஆணை தாசில்தாரால் வழங்கபடுகிறது. இந்த ஆணைகளை 15வது வார்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று தகுதியான முதியோர்களுக்கு ஓ.ஏ.பி. ஆணைகளை வழங்கினார்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் குப்பையில்லா நகராட்சி விழிப்புணர்வு தூய்மை பணி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் கம்பன் நகரில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் மக்கும், குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல், சுற்றுப்புற பகுதியை தூய்மையாக வைத்திருத்தல், உள்ளிட்ட கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன. தூய்மையாக வைத்திருப்போம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தானியங்கி நாப்கின் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டினை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார். 5 ரூபாய் நாணயம் போட்டால் நாப்கின் வரும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது. மாணவியர்களுக்கு ஆசிரியைகள் இதனை பயன்படுத்தும் முறை குறித்து கற்றுக்கொடுத்தனர்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் குப்பையில்லா நகராட்சி, காவேரி ஆற்றுப்படுகை கூட்டு தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு பேரணி நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இந்த பேரணியை எஸ்.ஐ. மலர்விழி துவக்கிவைத்தார். விட்டலபுரி, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தவாறும், கோஷங்கள் போட்டவாறும் அரசு கல்வியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சென்றனர்.

Updated On: 31 Oct 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்