குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில்  காந்தி பிறந்த நாள் விழா
X

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நடைபெற்ற காந்தி பிறந்த நாள் விழாவில் காந்தியின் திருவுருவச்சிலைக்கு தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம் மாலை அணிவித்தார்.

குமாரபாளையத்தில் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் பிரகாஷ் தலைமையில் காந்தி பிறந்தநாள் விழா சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தி.மு.க. நகர செயலர் செல்வம் காந்தி, காமராஜர் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நகர தலைவர் ஜானகிராமன் காந்தியின் திருவுருவப்படம், காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் மாவட்ட செயலர் காமராஜ், நகர மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, உஷா, நகர செயலர் சரவணன் பங்கேற்று காந்தி, காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வெற்றிவேல், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கவுரி, அருவங்காடு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணன், சி.எஸ்.ஐ. நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி காந்தி, காமராஜ் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!