இருதய நுரையீரல் புத்துயிர் பற்றிய செயல் விளக்கம்!

இருதய நுரையீரல் புத்துயிர் பற்றிய செயல் விளக்கம்!
X
ஜேகேகேஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருதய நுரையீரல் புத்துயிர் பற்றிய செயல் விளக்கம் நடைபெறவுள்ளது.

ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்

இளையோர் சங்கம் – முன் அறிக்கை

(“உலக இருதய புத்துயிர்ப்பு நாள்”)


நிகழ்வின் தலைப்பு: “இருதய நுரையீரல் புத்துயிர்” பற்றிய செயல் விளக்கம்”

நிகழ்விடம்: Advance Nursing Lab - ஜே. கே. கே. நடராஜா செவிலியர் கல்லூரி,

குமாரபாளையம் - 638 183.

நிகழ்ச்சி நடக்கும் தேதி: அக்டோபர், 16, 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 10.30 மணி, திங்கட்கிழமை

முன்னிலை: ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் புலமுதன்மையர் மற்றும் பொறுப்பு முதல்வர் ஆகியோர் முன்னிலையில்.

சிறப்பு விருந்தினர்: திருமதி. டாக்டர். ஆர். ஜமுனா ராணி, முதல்வர் ஜே. கே. கே. நடராஜா செவிலியர் கல்லூரி, குமாரபாளையம் - 638 183.

வரவேற்புரை: செல்வி. மௌலீஸ்வரி, முதலாமாண்டு பொருளியல் துறை மாணவி, ஜே. கே. கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் - 638 183 வரவேற்புரை வழங்குவார்.

நிகழ்வின் சிறப்புரை: திருமதி. டாக்டர். ஆர். ஜமுனா ராணி, முதல்வர் ஜே. கே. கே. நடராஜா செவிலியர் கல்லூரி, குமாரபாளையம் - 638 183. “இதய நுரயீரல் புத்துயிர்ப்பு” பற்றி மாணவ, மாணவர்களுக்கு செயல்முறை விளக்கத்துடன் சிறப்புரை வழங்குவார்.

பங்கு பெறுவோர் விவரம்: ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால்

உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்.

நிகழ்வின் முக்கியத்துவம்:

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16- ம் தேதி, “உலக மருதொடக்க இதய நாள்” விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சார நாளாகும். து அடிப்படை இருதய நுரையீரல் புத்துயிர்ப்பு (CPR) மற்றும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் (AED) திறன்களைக் கற்றுக்கொள்ள மக்களை ஊக்குவிக்கிறது. இது பரவலான இருதய நுரையீரல் புத்துயிர்ப்பு பயிற்சி மற்றும் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் இருதயத்தடையை அனுபவிக்கும் நபர்களின் உயிர்வாழ்வு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயிர்காக்கும் திறன் கொண்ட தனி நபர்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சி மற்றும் விழிப்புணர்வு ஆகும்.

மக்கள் அடிப்படை இருதய நுரையீரல் புத்துயிர் மற்றும் தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர் பல நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கான கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல், அவர்களை அதிக நம்பிக்கையுடனும், அவசர நிலைகளில் உதவக்கூடியதாகவும் ஆக்குகிறது. மேலும் விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவைக்கொண்டு அதிகமான மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் மாரடைப்பிலிருந்து மீண்டு, உயிர்வாழும் விகிதங்களை அதிகரிப்பதாகும்.

வளர்ச்சி இலக்குகள்:

“உலக இருதய புத்துயிர்ப்பு” தின நிகழ்வின் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, இலக்குகளுக்கான கூட்டு ஆகிய வாய்ப்பினை அளிப்பதற்க்கு இந்நிகழ்ல்வு வழிவகுக்கிறது.

நன்றியுரை:

நிகழ்ச்சியின் இறுதியில் செல்வி. மைதிலி, இரண்டாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவி நன்றியுரை வழங்குவார்.

Tags

Next Story
ai automation in agriculture