மாணவர்களுக்கு மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்திய வல்வில்ஓரி நண்பர்கள்

மாணவர்களுக்கு மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்திய வல்வில்ஓரி நண்பர்கள்
X

குமாரபாளையத்தில் வல்வில்ஓரி நண்பர்கள் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குமாரபாளையத்தில் வல்வில்ஓரி நண்பர்கள் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழகத்திற்கு பிளாஸ்டிக் தடை இருந்துவரும் வேளையில், இன்னமும் பல கடைகளில் கேரிபேக் வழங்கி கொண்டுதான் உள்ளனர். இது சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் என்பதை மாணவ, மாணவியர்களுக்கு உணர்த்திடும் வகையில் குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், வீ.மேட்டூர் அரசு பள்ளிகளில் உள்ள மாணாக்கர்களுக்கு வல்வில்ஓரி நண்பர்கள் குழுவினர் மஞ்சள் பை வழங்கி, கேரிபேக் ஏற்படுத்தும் சுகாதார சீர்கேட்டையும், மஞ்சள் பை ஏற்படுத்தும் நன்மையையும் எடுத்து கூறினார்கள்.

இதில் ஊராட்சி தலைவி புஷ்பா, கொத்துக்காரர் குழந்தைவேலு, ஆறுமுகம், நிர்வாகிகள் விஸ்வநாதன், கோபால், நவீன், ஹரிவர்சன், சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!