அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார். 

Today Water Supply News -குமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Today Water Supply News - குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குடிநீர் நீரேற்று நிலையம் அப்பகுதியில் இருப்பதால் நகரின் அனைத்து வாட்டர் டேங்க்குகளுக்கும் குடிநீர் நிரப்ப முடியாத நிலை அடிக்கடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறினார்கள்.இதுகுறித்து மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். இனி இது போல் மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் கவுன்சிலர்கள் வேல்முருகன், கோவிந்தராஜ், ஜேம்ஸ், தர்மராஜ், பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story