புதைவட மின்சாரத்தால் அடிக்கடி பழுதாகும் மின் மாற்றிகள்: பொதுமக்கள் புகார்

புதைவட மின்சாரத்தால் அடிக்கடி பழுதாகும் மின் மாற்றிகள்: பொதுமக்கள் புகார்
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறமுள்ள மின்மாற்றி பழுது பார்க்கும் பணியில் பணியாளர்கள்.

குமாரபாளையம் நகரில் புதைவட மின்சாரத்தால் மின் மாற்றிகள் அடிக்கடி பழுதாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குமாரபாளையம் நகரில் புதைவட மின்சாரத்தால் மின் மாற்றிகள் அடிக்கடி பழுதாகி வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறமுள்ள மின்மாற்றி நேற்று மாலை 02:30 மணியளவில் வெடித்தது. 45 நிமிடங்கள் மேலாகியும் யாரும் வரவில்லை. எந்த பழுது நீக்கும் பணியும் செய்யப்படவில்லை. அப்பகுதி பொதுமக்கள் மின்வாரியத்திற்கு புகார் தெரிவிக்க, இன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் விடுமுறையில் உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஏராளமானோர் புகார் தெரிவித்ததால், ஒரு மணி நேரத்திற்கு பின் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியை துவக்கினர். இந்த பணி மூன்று மணி நேரத்திற்கும் மேலாகியது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிப்புக்கு உள்ளாகியது.

புதைவட மின் பாதை அமைத்தது முதல் இதுபோன்று அடிக்கடி மின்மாற்றி பழுதுகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய பயிற்சி பெற்ற மின்வாரிய பணியாளர்கள் உள்ளனரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு லைன்மேன் தனக்கு உதவியாளரை வைத்துக்கொண்டு மின் கம்பம் ஏறும் பணி உள்பட செய்து வருகின்றனர்.

அரசு பணியாளராக இருக்கும் எந்த லைன்மேனும் கம்பம் ஏறுவதில்லை. அதுபோல் மாநிலத்தில் முதன் முதலாக குமாரபாளையத்தில் தான் புதைவாட மின்பாதை அமைக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் அதனை பழுது நீக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனரா? என்றால் அதற்கு பதில் இல்லை.

நேற்று நடந்த சம்பவத்தில் பணியாளர்கள் வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. அதன்பின் அதனை சரி செய்ய, அவர்கள் போன் செய்து வெளியில் இருந்து பணியாட்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து மின்மாற்றியை சரி செய்தனர். இதனால் ஒரு பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்ய சுமார் மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரம் ஆகிறது.

இதுபோன்ற சம்பவத்தால் அனைத்து தொழில் செய்பவர்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து பரிசீலித்து, குமாரபாளையம் மின் வாரிய அலுவலகத்தில் புதைவட மின் பாதை பழுது நீக்கும் பயிற்சி பெற்ற நபர்களை அதிகம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பி போதிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் உள்ளனரா? என்பதை உறுதி செய்யவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story