சுதந்திர போராட்ட தியாகி ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள் கொண்டாட்டம்..!
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் சுதந்திர போரட்ட தியாகி ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள் கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி மையத்தில், ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி ருக்மிணி லட்சுமிபதி விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
பாரிஸில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டார். மேலும் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றவர். மேலும் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் வெற்றி பெற்று சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மேலும் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரேணுகாதேவி இதற்கான ஏற்பாடு செய்திருந்தார். இதில் ரூத் பிரியங்கா தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu