மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு நாளை (9ம் தேதி) இலவச மருத்துவ முகாம்

மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு நாளை (9ம் தேதி) இலவச மருத்துவ முகாம்
X

பைல் படம்.

பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம், உள்ளடங்கிய கல்வி திட்டம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் பள்ளிபாளையம் ஆவாரங்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏப்.9ல், நடைபெறவுள்ளது.

கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அறிவுறுத்தல் படி, உதவி திட்ட அலுவலர் மகேஷ்குமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ், வழிகாட்டுதல் படி நடைபெறவுள்ள இந்த முகாம் காலை 09:30 மணி முதல், மாலை 01:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பார்வையின்மை, குறைப்பார்வை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல வகையான குறைபாடுகளுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இதனை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

இதில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்களுக்கான பதிவு உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்படவுள்ளன. குடும்ப அட்டை நகல் 2, தேசிய அட்டை நகல் 2, பாஸ்போர்ட் போட்டோ 4, ஆதார் அட்டை நகல் 2, ஆகியன கொண்டுவர வேண்டும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!