குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற இலவச சட்ட விழிப்புணர்வு முகாமில் சிறப்பு அழைப்பாளர்கள் மகளிர்குழு பெண்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

சாலைகளில் விபத்து இல்லாமல் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது.

இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள்.

இதில் விபத்தை தவிர்ப்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்ப்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!