இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்
X

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் நடந்தது.

குமாரபாளையம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி தலைவி கவிதா தலைமையில் நடந்தது.

எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணி திட்டம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில் நடந்த இந்த முகாமில் டாக்டர் ஜனனி தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். கண்ணில் புரை, மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டன.

முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கண் புரை நீக்குதல் அறுவை சிகிச்சைக்கு 41 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு பரிசோதனை சான்று நகலை ஊராட்சி தலைவி கவிதா, சமூக ஆர்வலர் சித்ரா வழங்கினர்.

ஐம்பெரும் விழா

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் முதல் சங்க கூட்டம், வட்டார, மண்டல தலைவர்கள் வழிகாட்டுதல் கூட்டம், குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம், டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம், பவானி, குமாரபாளையம் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பில் கூட்டுக் கூட்டம், புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு, சங்க மேம்பாட்டு நிகழ்ச்சி ஆகிய ஐம்பெரும் விழா, பட்டய தலைவர் ஜெகதீஷ் மற்றும் சங்க தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்தது.

இதில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை, கல்வி உபகரணங்கள், ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி சிப்பங்கள் வழங்கப்பட்டன. வரும் மாதங்களில் கண் சிகிச்சை, ரத்ததான, பொது சிகிச்சை முகாம் நடத்துதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைச்சரவை செயலர் தில்லை நடராசன், மண்டல தலைவர் சுரேஷ், வட்டார தலைவர் செந்தில், பசிப்பிணி போக்குதல் திட்ட நிர்வாகி சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!