குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: அரசு டாக்டர் தகவல்

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: அரசு டாக்டர் தகவல்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது.

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது என அரசு டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமாரபாளையம் அரசு தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை தொடர்பாக அனைத்து மருந்துகள், ஊசிகள், பரிசோதனைகள், ரத்தம் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்தும் இலவசம். இங்கு இரண்டு டயாலிசிஸ் கருவிகள் உள்ளது. விசைத்தறி,கைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிரமப்படாமல், இங்கு இலவச சிகிச்சை பெற்று பயன்பெறுங்கள். பல கிராமப்பகுதியில் இருந்தும் இங்கு வந்து இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை தொடர்புக்கு : 90473 74600, 94450 78021.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!