குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: அரசு டாக்டர் தகவல்

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை:  அரசு டாக்டர் தகவல்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் இலவச டயாலிசிஸ் சிகிச்சை.

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது என அரசு டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையத்தில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அரசு டாக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை தொடர்பாக அனைத்து மருந்துகள், ஊசிகள், பரிசோதனைகள், ரத்தம் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது.

இங்கு இரண்டு டயாலிசிஸ் கருவிகள் உள்ளது. விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிரமப்படாமல், இங்கு இலவச சிகிச்சை பெற்று பயனடையலாம். பல கிராமப்பகுதியில் இருந்தும் இங்கு வந்து இலவச சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு 90473 74600, 94450 78021 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!