குமாரபாளையம்: ஒ.ஏ.பி. பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வருகை
ஒ.ஏ.பி. பயனாளிகளுக்கு வழங்குவதற்காக வந்துள்ள இலவச வேட்டி, சேலைகள்.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, இலவச வேட்டி, சேலைகள், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் வந்து சேர்ந்துள்ளன.
இது பற்றி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார் கூறியதாவது: குமாரபாளையம் தொகுதியில் உள்ள குமாரபாளையம் அமானி, அக்ரஹாரம், அய்யம்பாளையம் அக்ரஹாரம், பல்லக்காபாளையம், படைவீடு, சமயசங்கிலி அக்ரஹரரம், சவுதாபுரம், பள்ளிபாளையம், அக்ரஹாரம், களியனூர், அக்ரஹாரம், எலந்தகுட்டை, மோடமங்கலம், அக்ரஹாரம், ஆனங்கூர், காடச்சநல்லூர், கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், புதுப்பாளையம் அக்ரஹாரம் ஆகிய நகர, கிராம பகுதிகளை சேர்ந்த முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. இதற்காக 8 ஆயிரத்து 819 வேட்டிகளும், 22 ஆயிரத்து 029 சேலைகளும் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் வந்துள்ளன. இவைகள் அந்தந்த வி.ஏ.ஒ. அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu