குமாரபாளையத்தில் நடமாடும் இலவச பல் சிகிச்சை பேருந்து துவக்கம்

குமாரபாளையத்தில் நடமாடும் இலவச பல் சிகிச்சை பேருந்து துவக்கம்
X
குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் நடமாடும் இலவச பல் சிகிச்சை பேருந்து துவக்கம்.

குமாரபாளையத்தில் நடமாடும் இலவச பல் சிகிச்சை பேருந்து துவக்கப்பட்டது.

குமாரபாளையம், ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, மற்றும் கல்லூரியின் சமூக நல பல் மருத்துவத்துறை இணைந்து, நடமாடும் இலவச பல் மருத்துவமனை பேருந்தினை கல்லூரி தலைவர் செந்தாமரை துவக்கி வைத்தார். இயக்குனர் ஓம் சரவணா முன்னிலை வகித்தார். பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். இளஞ்செழியன் உடன் இருந்தார்.

குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் நடமாடும் இலவச பல் மருத்துவமனை பேருந்தினை கல்லூரி தலைவர் செந்தாமரை துவக்கி வைத்தார்.

இந்த நடமாடும் இலவச பல் மருத்துவமனை பேருந்தில் சிகிச்சை அளிக்க வசதியாக கம்பரசர் பொருத்தப்பட்ட இரண்டு பல் மருத்துவ நாற்காலிகள், கையடக்கமான எக்ஸ்ரே மெசின், மற்றும் அனைத்து விதமான பல் மருத்துவ உபகரணங்கள் உள்ளன. யூ.பி.எஸ். மற்றும் ஜெனரேட்டர் இரண்டிலும் இயங்கும் வகையில் நடமாடும் பேருந்து அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தி அங்குள்ள மக்களுக்கு சொத்தை பல், பல் கூச்சம் ஈறுகளில் ரத்தக்கசிவு, ஈறு சிதைவு நோய்,வாய் துர்நாற்றம், உடைந்த பற்கள், ஆறாத வாய்ப்புண், உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இதில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!