இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு பெற விண்ணப்பம் ஒப்படைக்கும் முகாம்

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு பெற விண்ணப்பம் ஒப்படைக்கும் முகாம்
X

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு பெற விண்ணப்பம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற்றது. (இடம்: ராஜராஜன் நகர்)

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு பெற விண்ணப்பம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராஜராஜன் நகரில் பா.ஜ.க. சார்பில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு பெற விண்ணப்பம் ஒப்படைக்கும் முகாம் நடைபெற்றது.

நகர தலைவர் ராஜு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பங்கேற்று, இலவச காஸ் சிலிண்டர், அடுப்பு பெற பூர்த்தி செய்யப்பட்ட 21 விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டார்.

இதுகுறித்து பா.ஜ.க., ஒ.பி.சி. அணி நகர தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். இதேபோல் அனைத்து வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

நிர்வாகிகள் துபாய் கணேசன், சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!