குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை நான்காம் ஆண்டு விழா
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற நான்காம் ஆண்டு விழாவில், சிறப்பு அழைப்பாளராக காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் நிறுவனரும், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலருமான கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்று வாழ்த்தி பேசினார்.
குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை நான்காம் ஆண்டு விழா தலைவர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், சஷ்டி கேபிட்டல்ஸ் நிறுவனர் விஜய்கண்ணன் விழாவை தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையம் நிறுவனரும், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலருமான கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்று வாழ்த்தி பேசினார்.
அப்போது, எதிர்கட்சியை நாங்கள் எதிரி கட்சியாக பார்ப்பது இல்லை. ஜல்லிக்கட்டு குறித்து முன்பு விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது. சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் ஜல்லிக்கட்டு பற்றி கூறியது கண்டு அதிசயித்தேன்.11ம் நூற்றாண்டில் ஏர் தழுவுதல் என்ற பெயரில் நடந்த நிகழ்வு, நாளடைவில் ஜல்லிக்கட்டு என மாறியது.
ஜல்லிக்கட்டு குறித்து தவறான தகவல் பரவி வந்த நிலையில், டெல்லியில் நடந்த ஒரு ஆலோசனை கூட்டத்தில் செல்லமேஸ்வரன் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய போது, உச்ச நீதிமன்றம் தேவையற்ற விசயத்தில் தலையிடுகிறது. இது பண்பாடு சார்ந்த விஷயம். தங்கள் உரிமையை காக்க போராடவும் தயங்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு மாடுகளை தங்கள் குழந்தைகள் போல் பாவித்து வளர்த்து வருகிறார்கள் என்று பேசினார்.
ஸ்பெயின் நாட்டில் மாடுகளை வைத்து நிகழ்ச்சி நடத்தி பொருளாதரத்தை பெருக்கி வருகிறார்கள். சுற்றுலா இடங்களில் பயணிகள் காணும் வகையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தி நமது கலையை, பண்பாட்டினை உலகிற்கு எடுத்து சொல்லலாம். சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நினைவு சின்னம் அமைக்க முயற்சி செய்வோம். எந்தவொரு நிகழ்ச்சியானாலும் கட்சி நிர்வாகிகளை அழைக்கும் போது, அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலர்களை அழையுங்கள்.
குமாரபாளையம் மேற்கு மாவட்ட செயலர் மூர்த்தியிடம் நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று கூறியதற்கு, எனக்கு நிகழ்ச்சி நடப்பதே தெரியாது என்று கூறினார். மூர்த்தி இல்லாமல் நான் வந்ததே தவறு. அவரது பெயர் கூட அழைப்பிதழில் இடம்பெறவில்லை. 1949ல் இருந்து செயல்பட்டு வரும் தி.மு.க.வின் செயல்பாடு வேறு, முந்தைய ஆட்சியின் செயல்பாடு வேறு,. மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் இரு பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி. இது போன்ற ஜல்லிக்கட்டு தொடர்புடைய நிகழ்சிகளுக்கு பெண்கள் இன்னும் அதிக அளவில் பங்கேற்று ஆதரவு வழங்க வேண்டும் என அவர் பேசினார்.
தி.மு.க. நிர்வாகி செல்வராஜ், பி.ஆர்.டி. ரிக்ஸ் நிறுவனர் பரந்தாமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu