குமாரபாளையத்தில் நலத்திட்ட பணிகள்; பங்கேற்ற முன்னாள் அமைச்சர்

குமாரபாளையத்தில் நலத்திட்ட பணிகள்; பங்கேற்ற முன்னாள் அமைச்சர்
X

குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் மகளிர் குழு மண்டப திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். 

குமாரபாளையம் அருகே மகளிர் குழு மண்டபம், குடிநீர் மேனிலைத்தொட்டி உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் துவங்கி வைத்தார்.

நலத்திட்ட பணிகள் திறந்து வைத்த வைத்த முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் அருகே மகளிர் குழு மண்டபம், குடிநீர் மேனிலைத்தொட்டி உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகரில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன், ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.


விழாவில் தங்கமணி பேசியதாவது:

ஜெய்ஹிந்த் நகர் மண்டபம் கட்ட, நான் அமைச்சராக இருந்த போது 2018ல் 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி பற்றாகுறை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பொது நிதியிலிருந்து இந்த மண்டப பணிகளுக்கு மேலும் 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மண்டபம் கிட்டத்திட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டபட்டுள்ளது. இந்த மண்டபம் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். இப்பகுதியில் வாய்க்கால் நீர் வராவிட்டால் தண்ணீர் பஞ்சம் வந்துவிடுகிறது. அதனை சரி செய்ய வேண்டி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்தார். அதன்படி, மேட்டூர் அருகே இருந்து காவிரி நீர் எடுத்து, தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மண்டப பணிகள் விரைந்து முடிக்க காரணம், உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் காரணம். அதனை மறந்து விடக்கூடாது. மிகுந்த முனைப்புடன் பணியாற்றினார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் இதே பகுதியில் சுகாதார வளாகம், மேனிலைத்தொட்டி, குப்பாண்டபாளையம் பகுதியில் புதிய சாலைகள், சுகாதார வளாகம், தானியக் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து, பி.டி.ஓ.பிரகாஷ், பொறியாளர் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!