குமாரபாளையத்தில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆனங்கூர் பிரிவு சாலையிஇருந்து நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ வுமான தங்கமணி பங்கேற்று ஊர்வலத்தை துவக்கி வைத்து, அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.
அவர் பேசும்போது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து வருவது அ.தி.மு.க..வாக்களித்த மக்கள் எல்லோரும் ஏன் தி.மு.க.விற்கு வாக்களித்தோம் என்று எண்ணிக்கொண்டு உள்ளனர். சொத்து வரி உயர்வுடன், தற்போது மி கட்டண உயர்வு. அதை கண்டித்துதான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அம்மாவின் ஆட்சியில், அண்ணனின் ஆட்சியில் மின் வெட்டு இல்லை, மின் கட்டண உயர்வு இல்லாமல் ஆட்சி செய்தனர். மக்கள் நிம்மதியாக இருந்தனர். இலவச பஸ் என்று சொல்லிவிட்டு பாதி பஸ்களை நிறுத்தி விட்டார்கள். இதுதான் அவர்கள் சாதனை. இனி பஸ் கட்டணம் உயர்த்த போகிறார்கள். அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம்,லேப்டாப் நிறுத்தப்பட்டு விட்டது. மதுரை அமைச்சர் தன் மகன் திருமணத்தை 100 கோடி செலவில் செய்துள்ளார். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுதான் ஆகின்றது. முதல்வர் சென்று பாராட்டி வந்தார் என்றால், கொள்ளையடிப்பதற்கு முதல்வரே பச்சைக்கொடி காட்டி விட்டு வருகிறார். வருகிற எம்.பி. தேர்தலில் தி.மு.க.விற்கு முடிவு கட்டும் வகையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து 40 பேரையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். நகர செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ஓ.பி.எஸ். அணி சார்பில் முன்னாள் நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர தி.மு.க. சார்பில் நகர செயலர் செல்வம் தலைமையிலும், நகராட்சி சேர்மன் அணியினர் விஜய்கண்ணன் தலைமையிலும் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலர் ஒபுளிசாமி தலைமையில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu