விருது பெற்ற ஊராட்சி தலைவிக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு

குமாரபாளையம் அருகே தட்டான்குடை ஊராட்சி தலைவி புஷ்பா சிறந்த சேவை செய்தமைக்காக விருது பெற்றமைக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி பாராட்டினார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி தலைவியாக புஷ்பா செயல்பட்டு வருகிறார். இவர் பொதுமக்கள் புகார்களை உடனுக்குடன் பரிசீலித்து பணிகள் செய்து தருதல், ஊராட்சி முழுதும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் செயல்படுத்துதல், கணவரின் தலையீடு இல்லாமல், தானே அனைத்து பணிகளையும் கவனித்தல், அரசு விழாக்களை முறைப்படி நடத்துதல், பல தலைமுறைகளாக மயான வழி இல்லாமல் இருந்த குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கு, மாற்று சமுதாய நில உரிமையாளர்களிடம் பேசி, வழித்தடம் பெற்றது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியது என்பது உள்ளிட்ட பல பணிகளை பாராட்டி விருது பெற தேர்வு செய்யப்பட்டார்.
கலையின் குரல் மற்றும் மோகன் பொதுநல அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் புஷ்பாவிற்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற புஷ்பாவை முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஒன்றிய செயலர்கள் செந்தில், குமரேசன் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லமுத்து கூறுகையில், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா எம்.பார்ம் பாடிட்டு உள்ளார். சிறிய வயதில் சிறந்த நிர்வாகத்திறமை கொண்டு பனியாற்றி வருகிறார்.
பலரும் பல வகைகளில் இடையூறுகள் கொடுத்தாலும் அத்தனையும் சமாளித்து விருது பெரும் வகையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் பெயரில் ரியல் எஸ்டேட் அமைக்கப்பட்டது. இதற்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாக, ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன் தரப்பினர், கிராம சபா கூட்டத்தில் புகார் மனு கொடுத்தது, ரியல் எஸ்டேட் அனுமதி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற சொன்னது, அதை ஊராட்சி தலைவி மறுக்கவே, ஊராட்சி அலுவலகம் முன்பு இரு நாட்களாக பகல் இரவாக காத்திருப்பு போராட்டம் நடத்தியது, நேற்று அதே ரியல் எஸ்டேட் பகுதியில் சாலை அமைக்க வந்தவர்களிடம், எதிர் தரப்பினர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது என பலகட்ட போராட்டங்கள் நடந்து வந்தன. இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர்கள் மீது ஊராட்சி தலைவி புஷ்பா குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இது சம்பந்தமாக முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை குமாரபாளையம் தாசில்தார் கதிர்வேல் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினர், இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட தாசில்தார், இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்வதாகவும், அதுவரை யாரும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் கூறினார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதே போல், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி நல்லாம்பாளையம் பகுதியில் ஏரி உள்ளது. இது சிறுக, சிறுக மண் அரிப்பு ஏற்பட்டு இந்த கரைகள் முற்றிலும் சேதமானது. இதனால் மழை நீர் வந்தால் தேங்காமல் வீணாக சென்று விடுகிறது. இதனை புதிதாக கரை கட்டி தண்ணீர் சேமித்து வைக்க இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ஊராட்சி தலைவி புஷ்பா இதற்கான முயற்சி எடுத்து, 10 லட்சம் அரசு நிதி உதவி பெற்று ஏரியின் கரைகளை புதிதாக அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஏரியில் மழை நீர் நின்றால், இப்பகுதி விவசாய கிணறுகளில் நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் இருக்கும். இதனால் இப்பகுதி விவசாயிகள் தண்ணீர் கவலையில்லாமல் விவசாயம் செய்ய உதவியாக இருக்கும். கால்நடைகளுக்கும் போதுமான குடிநீர் கிடைக்கும்.
பொதுமக்களின் நல்லாதரவை பெற்று வருகிறார். அவர் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu