/* */

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஆலோசனை

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளர்களுடன்  முன்னாள் அமைச்சர் ஆலோசனை
X

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்றார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணி பங்கேற்று பேசினார்.

அவர் பேசியதாவது:- வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து எடுத்து சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்த விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு மாறியுள்ள வாக்காளர்களை தற்போது இருக்கும் இடத்திற்கு சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

குமாரபாளையத்தில் போட்டியிடும் 33 வார்டு வேட்பாளர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வரும், தகவல் தொழில் நுட்ப பிரிவு குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளருமான தரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலர் புருஷோத்தமன், நகர செயலர் சிங்காரவேல், நகர அ.தி.மு.க. துணை செயலர் திருநாவுக்கரசு, பள்ளிபாளையம் அ.தி.மு.க. நிர்வாகி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 10 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!