கட்டுமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

கட்டுமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்
X

குமாரபாளையம் அருகே கட்டுமான பணியில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் ஆறுதல் கூறினார்.

கட்டுமான விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்க மணி நேரில் ஆறுதல் கூறினார்.

குமாரபாளையம் அருகே கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் தட்டான்குட்டை மேல் மற்றும் கீழ் காலனியை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வந்தனர். கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்ட சாரம் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதில் கீழே விழுந்த 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் வந்து நிதி உதவி செய்து ஆறுதல் கூறினார். இதில் அ.தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!