மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல்
X

குமாரபாளையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.

குமாரபாளையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, நகர திமுக செயலர் பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினர்.

குமாரபாளையம் பகுதியில் பல இடங்களில் மழை நீர் புகுந்து பெரும்பாலான வீடுகளில், தொழில் நிறுவனங்களில், பள்ளிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த பகுதிகளில் உணவு வழங்கப்பட்டது. நகர செயலர் பாலசுப்ரமணி, துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதே போல் மழை பாதிப்பு பகுதியில் நகர செயலர் செல்வம் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் நீர் வடிய தேவையான உதவிகளை செய்தார். தி.மு.க. சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நிர்வாகிகள் ரவி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story