அன்பழகன் 2 ம் ஆண்டு நினைவு நாள்: திமுகவினர் மரியாதை

அன்பழகன் 2 ம் ஆண்டு நினைவு நாள்: திமுகவினர் மரியாதை
X

பைல்படம்

குமாரபாளையம் திமுக. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் 2 ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் திமுக முன்னாள் அமைச்சப் அன்பழகன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதியான அன்பழகன் திமுக. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர். இவரது 2வது ஆண்டு நினைவு நாளையொட்டி நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் அன்பழகனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நிர்வாகிகள் ராஜ்குமார், புவனேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!