பவானி அருகே உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முன்னாள் தலைமை நீதிபதி

பவானி அருகே உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முன்னாள் தலைமை நீதிபதி
X

பவானி அருகே முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வாக்களித்தார்.

பவானி அருகே உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வாக்களித்தார்.

பவானி அடுத்துள்ள காடப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் நீதிபதி சதாசிவம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுனராகவும் பதவி வகித்தவர். இவர் பணி ஓய்வுக்கு பின்னர் சொந்த ஊரான காடப்பநல்லூரில் வசித்து வருகிறார்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு 5வது வார்டு உறுப்பினர் மற்றும் 3 ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதற்காக காடப்பநல்லூர் ஊராட்சியில் பெரமிச்சிபாளையம் நூலக கட்டிடத்தில் அமைக்கபட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது மனைவி சரஸ்வதியுடன் வாக்கினை செலுத்தினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!