மாநில அளவிலான கோகோ போட்டிக்கு குமாரபாளையம் மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான கோகோ போட்டிக்கு   குமாரபாளையம் மாணவர்கள் தேர்வு
X

மாநில அளவிலான கோகோ போட்டிக்கு குமாரபாளையம் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

மாநில அளவிலான கோகோ போட்டிக்கு குமாரபாளையம் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

மாநில அளவிலான கோகோ போட்டிக்கு குமாரபாளையம் மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

குமாரபாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சிவகுமார் -லீலாவதி தம்பதியினரின் மகன் சுனில் மற்றும் ரமேஷ்- ரேவதி தம்பதியரின் மகன் பசந்த் ஆகிய இருவர் மாவட்ட அளவிலான கோகோ போட்டியில் வெற்றி பெற்று, மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், பொதுநல ஆர்வலர்கள் விடியல் பிரகாஷ், பாண்டியன், சண்முகம், அங்கப்பன், தீனா உள்ளிட்ட பலர் பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டினர்.

இவர்கள் இருவரையும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!