குமாரபாளையத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான குறை தீர்க்கும் முகாம்

குமாரபாளையம் அருகே வாகன ஓட்டுனர்களின் குறைதீர் முகாம் நடைபெற்றது.
சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயிர்ப்பலி வாங்கும் விபத்துக்களில் இருந்து மக்களையும், வாகன ஓட்டுனர்களையும் பாதுகாப்பதற்காக அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஓட்டுநர் சங்கங்களின் தொடர் போராட்டங்களின் பலனாய் நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமாவின் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகளிலும் ஓட்டுநர்களின் குறைகளை கேட்பதற்கான கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று குமாரபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்குழலி தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்சா ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், சிற்றுந்து ஓட்டுநர்கள், பாரம் ஏற்றும் வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரிடம் தெரிவித்தனர்.
இந்த முகாம்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu