குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. நவ. 4,5, மற்றும் நவ. 18,19 ஆகிய சனி, ஞாயிறுகளில், ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், பிழை திருத்தம் ஆகியவை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் அறிவுறுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் இடங்களை கலெக்டர் பார்வையிட்டார்.
குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் சமயங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை நகராட்சி பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைப்பது வழக்கம். இந்த இடங்களில் போதிய இட வசதி, மின்சார வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உள்ளனவா? என மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, தகுதி உள்ள நபரா? என விசாரணை செய்ய உத்தரவிட்டார். நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் சண்முகவேல் வி.ஏ.ஒ. முருகன், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் மகளிர் உரிமை தொகை பெற வங்கி மற்றும் அஞ்சல் துறை சார்பில் சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்ததையடுத்து, அதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டது. பயனாளிகளுக்கு பணம் அனுப்ப வங்கி மற்றும் அஞ்சல் துறை சேமிப்பு கணக்கு துவக்கும் பணி நேற்று குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாலுகா அளவிலான பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி சேமிப்பு கணக்கு துவங்கினார்கள்.
இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:
மகளிர் உரிமை தொகை பெற விண்ணபித்த விண்ணப்பதாரர்களில் பலர் வங்கி கணக்கு எண், கொடுத்திருந்தார்கள். அந்த வங்கியில் நீண்ட காலமாக வரவு செலவு வைக்காத காரணத்தால் பெரும்பாலான வங்கி கணக்குகள் செயல்படாத நிலையில் இருந்தன. அதனால் அப்படிப்பட்ட நபர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் வங்கி மற்றும் அஞ்சல் துறை மூலம் சேமிப்பு கணக்கு துவக்கும் முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று சேமிப்பு கணக்கு துவக்கி பயன்பெற்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu