பள்ளிபாளையம் பகுதியில் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு..!

பள்ளிபாளையம் பகுதியில் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு..!
X

உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்

பள்ளிபாளையம் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

பள்ளிபாளையம் உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் , பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது கெட்டுப்போன பழைய கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி உள்ளிட்ட 10 கிலோ இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு, அது சூடுபடுத்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பழைய பரோட்டா மற்றும் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி உள்ளிட்டவற்றை பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும் உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் உணவுகளில் பல்வேறு பிரச்னைகள் இருப்பது அவ்வப்போது உடனே விடியோவாக நமது முழுவதும் பரவி விடுகிறது. இவ்வாறு பரவுவது மக்களிடையே உணவகங்கள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது. மேலும் பலர் வெளிட்ட சென்றால் உணவகங்களில் உணவருந்தவே அச்சம் கொள்கின்றனர்.

பலர் வெளியே சென்றால் வீடுகளிலேயே உணவு தயாரித்து எடுத்துச் செல்கின்றனர். தற்போது உணவுத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் அடுத்து தமிழகம் முழுவதும் அதிரடியாக உணவகங்களில் சோதனை நடத்தி வருகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்