உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் மூடப்பட்ட சில்லி சிக்கன் கடை

உணவு பாதுகாப்பு அதிகாரிகளால்   மூடப்பட்ட சில்லி சிக்கன் கடை
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் மூடப்பட்டது

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் சில்லி சிக்கன் கடை மூடப்பட்டது

குமாரபாளையத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் சில்லி சிக்கன் கடை மூடப்பட்டது.

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே மும்பை சவர்மா என்ற சிக்கன் வறுவல் கடையில் விற்கப்பட்ட சிக்கன் துர்நாற்றம் வீசியது. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து நேற்று இந்த கடையை பூட்டினர்.

இது பற்றி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் கூறியதாவது: பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் எந்த உணவு பொருள் கடையாக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் அடிப்படையில் உரிய ஆய்வு செய்து இந்த சிக்கன் கடை பூட்டப்பட்டது. மேலும் நகரில் பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!