குமாரபாளையம் அருகே பாலம் கட்டுமான இடத்தில் ஒளிரும் விளக்குகள்
குமாரபாளையம் அருகே பாலம் கட்டுமான இடத்தில் விபத்துக்கள் தடுக்க ஒளிரும் விளக்குகள் வைக்க வேண்டிய இடம்.
குமாரபாளையம் அருகே பாலம் கட்டுமான இடத்தில் விபத்துக்கis தடுக்க ஒளிரும் விளக்குகள் அதிகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. சேலம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கொங்கு மண்டபம் அருகே சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகிறது. இந்த இடத்தில் எச்சரிக்கை சிவப்பு விளக்கு அடிக்கடி பழுதாகி எரியாமல் உள்ளது. இந்த இடத்தில்தான் ஒரு சர்வீஸ் சாலையிலிருந்து மற்றொரு சர்வீஸ் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒளிரும் விளக்கு, இந்த இடத்தில் இல்லாததால், சேலம் பக்கமிருந்து வரும் வாகனங்கள் நேராக கட்டுமான பகுதிக்குள் புகுந்து விடும் அபாயமும், சாலையை கடக்கும் வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்து நடக்கும் நிலையும் இருந்து வருகிறது. பெரும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடக்கும் முன்பு, இந்த இடத்தில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு மற்றும் ஒளிரும் விளக்குகள் அதிக அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu