புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 பேர், மது குடிக்க அனுமதித்த ஒருவர் கைது
பைல் படம்.
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் பேரில் புகையிலை பொருட்கள் விற்பவர்களை பிடிக்கும் பணியில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, எஸ்.ஐ. நந்தகுமார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஆலாங்காட்டுவலசு பகுதியில் தனது பெட்டிக்கடையில் விற்ற சுப்ரமணி, 51, கிழக்கு காலனி பகுதியில் தனது பெட்டிக்கடையில் விற்ற மகாராஜா, 40, வட்டமலை பகுதியில் மளிகை கடையில் விற்ற விஸ்வநாதன், 30, அம்மன் நகர் பகுதியில் மளிகை கடையில் விற்ற பக்தவச்சலம், 65, நாராயணநகர் மளிகை கடையில் விற்ற செந்தில்குமார், 42, ஆகிய 5 பேரும், கத்தேரி, பசுமை தாபா அருகே மது குடிக்க அனுமதி கொடுத்த ஆனந்த், 35, என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu