/* */

பீகாரில் நடந்த ஃபிஸ்ட் பால் போட்டியில் குமாரபாளையம் மாணவி சாதனை

பீகாரில் நடைபெற்ற ஃபிஸ்ட் பால் போட்டியில், குமாரபாளையம் மாணவி தபஸ்வினி சாதனை படைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

HIGHLIGHTS

பீகாரில் நடந்த ஃபிஸ்ட் பால் போட்டியில் குமாரபாளையம் மாணவி சாதனை
X

பீகாரில் நடந்த பிஸ்ட் பால் போட்டியில், குமாரபாளையம் மாணவி தபஸ்வினி சாதனை படைத்துள்ளார். அவருடன் குழுவினர். 

தேசிய அளவிலான பிஸ்ட் பால் போட்டி, பீகாரில் டிச. 17 முதல், டிச. 20 வரை நடைபெற்றது. இதில், இமாச்சல பிரதேசம், சண்டிகர், அருணாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 9 மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

தபஸ்வினி

தமிழ்நாடு அணியில் சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவில், தலா 10 பேர் பங்கேற்றனர். இதில் முதல் பரிசு, இமாச்சல பிரதேசத்திற்கும், 2வது பரிசு தமிழ்நாடு அணிக்கும், 3வது பரிசு சண்டிகர் அணிக்கும் கிடைத்தன. தமிழ்நாடு சார்பில் சீனியர் மற்றும் ஜூனியர் இரு பிரிவிலும், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் தபஸ்வினி, 15 , இரண்டாம் பரிசு பெற்று, தமிழக அணிக்கும், குமாரபாளையத்திற்கும் பெருமை சேர்த்தார்.


மாணவி தபஸ்வினியை, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்கிய, நீதிபதி மனோஜ்குமார், தமிழ்நாடு பிஸ்ட் பால் சம்மேளன தேசிய லைவர் பாலவிநாயகம், பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார், சவுந்திரராஜன், விஜய் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Updated On: 21 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பரோட்டா பிரியரா நீங்க? - இந்த உண்மைகள் தெரிஞ்சா பரோட்டா பக்கமே போக...
  2. வீடியோ
    🔴LIVE : சென்னையில் EV சார்ஜிங் நிலையம் அறிமுக நிகழ்ச்சி || #ev...
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் அடிக்கடி முகம் கழுவுபவரா நீங்க...?
  4. சினிமா
    தனியா உக்காந்து பாத்துடாதீங்க..! அப்றம் பயந்து போயிடுவீங்க..!
  5. வீடியோ
    எனக்கு இப்படி ஒரு படம் கெடச்சது சந்தோசம் Vani Bhojan ! |#anjaamai...
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையாரை தரிசனம் செய்த அண்ணாமலை
  7. வீடியோ
    Garudan Movie-ய Friends எல்லாம் சேந்து பாக்கலாம் !! #garudan #soori...
  8. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் லைவ் மேட்ச் எங்க பாக்கலாம்?
  9. விளையாட்டு
    இந்தியா - வங்கதேசம் டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்..!
  10. வீடியோ
    Garudan படத்தில செம்ம Goosebumps சீன்ஸ் இருக்கு !! #soori #hero ...