பள்ளிபாளையம் அருகே கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் விழுந்த நாயை   மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் விழுந்த நாயை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் விழுந்த நாயை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் குளத்துக்காடு பகுதியில் மூர்த்தி வகையறாவிற்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. பூனையை விரட்டி வந்த நாய் ஒன்று எதிர்பாரதவிதமாக அந்த கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு மக்கள் தகவல் தெரிவிக்க, நிலைய அலுவலர் (பொ) சந்திரசேகரன் தலைமையில் உடனே நேரில் வந்து கிணற்றில் இறங்கி நாயை உயிருடன் மீட்டனர். அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினரை பாராட்டினர்.

Tags

Next Story
ai in future agriculture