விபத்தில்லா தீபாவளி: அரசு பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்

விபத்தில்லா தீபாவளி: அரசு பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்
X

குமாரபாளையம் அரசு பள்ளியில், விபத்து இல்லாத தீபாவளி குறித்து, செயல்முறை விளக்கம் அளித்த தீயணைப்பு படையினர்.

குமாரபாளையம் அரசு பள்ளியில், விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

குமாரபாளையம் அரசு பள்ளியில், தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. இது குறித்து, தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் கூறியதாவது: குமாரபாளையம் தீயணைப்பு படையினர், தளிர்விடும் பாரதம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, நிலைய அலுவலர் குணசேகரன், பொதுநல அமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.

குழந்தைகள், பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் மேற்பார்வையிலும், காட்டன் உடைகளை அணிந்து கொண்டும், புஸ்வானம் கொளுத்தும் போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்றும் கொளுத்த வேண்டும். ஒரு வாளி நீர் எப்போதும் அருகில் வைத்திருக்க வேண்டும். தீப்புண்ணுக்கு தண்ணீர் உடனே ஊற்ற வேண்டும், எண்ணை பயன்படுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தீயணைப்பு படையினர் அருள்குமார், சக்திவேல், கார்த்திக், ஜெகதீஸ், பொதுநல அமைப்பினர் வரதராஜ், மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare