குமாரபாளையத்தில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது
உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சார்பில் பணியின் போது எதிர்பாராதவிதமாக வீர மரணம் அடைந்தவர்களுக்கு ஆண்டுதோறும் ஏப். 14 ல் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடத்தப்படுவது வழக்கம். ஏப்.14 முதல் ஏப்.20 வரை தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம், , பள்ளி கல்லூரிகளுக்கு சென்று தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். தீயணைப்புத் துறை சார்பில், குமாரபாளையம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சிறப்பு தீயணைப்புதுறை அலுவலர் தண்டபாணி தலைமையில். அனைத்து அலுவலர்கள் மற்றும் வீரர்கள் பங்கேற்று நீத்தார் நினைவு நாள் மலர் வளையம் வைத்து அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.
குமாரபாளையம் அருகே உயர் தொழில் நுட்ப பூங்காவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், காவேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில் குளிர் சாதன கருவியில் உள்ள ஸ்பான்ச் எனப்படும் பஞ்சு போன்ற பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மேல் தளத்தில் தீ பரவியது. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நேரில் வந்த அவர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். குளிர்ச்சிக்காக மேலே போடப்பட்ட அட்டைகள் அகற்றப்பட்டு தண்ணீர் ஊற்றி முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இதில் ஜவுளி உள்ளிட்ட எந்த பொருட் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu