/* */

காவிரியில் வெள்ள அபாயம்: வெப்படை தீயணைப்பு படையினர் ஆயத்தம்

காவிரியில் வெள்ள அபாயம் நிலவும் சூழலில், வெப்படை தீயணைப்பு படையினர் மீட்புப்பணிக்கு ஆயத்தமாக உள்ளனர்.

HIGHLIGHTS

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் நிலவும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மாவட்ட கலெக்டர், சேலம் டி.ஐ.ஜி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்பதற்கு, தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிக்கு தேவையான கயிறு, டியூப்கள், பிளாஸ்டிக் படகுகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவைகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பள்ளிபாளையம் அருகே வெப்படை தீயணைப்பு படையினர் சார்பில், மீட்புப்பணி செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. செயல்முறை விளக்க முகாமானது, நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் வெப்படை தீயணைப்பு படையினரால் நடத்தி காண்பிக்கப்பட்டது. வெள்ளத்தின் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், அப்போது வினியோகம் செய்யப்பட்டன.

Updated On: 10 Nov 2021 11:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...