தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க விழிப்புணர்வு முகாம்..!

தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க விழிப்புணர்வு முகாம்..!
X

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் நடந்தது.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

தீயணைப்பு துறை சார்பில் செயல்முறை விளக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க விழிப்புணர்வு முகாம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது.

இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மில் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

தீ தொண்டு வாரம்

தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு படையினர் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. மாநில அளவில் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலுடன், தீயணைப்பு வீரர் போல் உருவ பொம்மை அருகே வைக்கப்பட்டிருந்தது. நிலைய அலுவலர் மற்றும் மற்ற தீயணைப்பு படையினர் மலர் வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதன் ஒரு கட்டமாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் தீத்தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி அலுவலகம் முன்பு துவங்கி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று பள்ளிபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு படையினர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தவாறும் பேரணியில் சென்றனர். கல்லூரி முதல்வர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil