குமாரபாளையம் அரசு பள்ளியில் தீயணைப்பு படையினரின் தீ தடுப்பு விழிப்புணர்வு

குமாரபாளையம் அரசு பள்ளியில் தீயணைப்பு படையினரின் தீ தடுப்பு விழிப்புணர்வு
X

குமாரபாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற தீயணைப்பு படையினரின் தீ தடுப்பு செயல்முறை விளக்க முகாம்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் தீயணைப்பு படையினரின் தீ தடுப்பு விழிப்புணர்வு செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம், விடியல் ஆரம்பம் மற்றும் தீயணைப்பு படையினர் சார்பில் தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு செயல் விளக்க முகாம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளியில் அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ், பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து தீயனைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் கூறுகையில், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களின் மேற்பார்வையிலும், காட்டன் உடைகளை அணிந்து கொண்டும், புஸ்வானம் கொளுத்தும் போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்றும் கொளுத்த வேண்டும். ஒரு வாளி நீர் எப்போதும் அருகில் வைத்திருக்க வேண்டும். தீ புண்ணுக்கு தண்ணீர் உடனே ஊற்ற வேண்டும். எண்ணை பயன்படுத்த கூடாது என அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு படையினர் அருள்குமார், சக்திவேல், கார்த்திக், ஜெகதீஸ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story