ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு
X

தீத்தடுப்பு விழிப்பிணர்வு நிகழ்வில், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 

குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், ஸ்ரீ ராகவேந்திரா பப்ளிக் பள்ளி மற்றும் தீயணைப்பு துறை இணைந்து, கல்லூரி வளாகத்தில் தீயணைப்பு தீ தடுப்பு முறைகள் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து சிறப்பு முகாமை நடத்தின.

கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் தலைமையில், தீயணைப்புத்துறை அதிகாரி குணசேகரன் முன்னிலையில், இம்முகாம் நடைபெற்றது. இதில், வீடுகள், தொழிற்சாலைகள் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளில் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்தும், அதை முழுமையாக அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

மேலும், தீபாவளி பண்டிகை காலங்களில் மாணவ மாணவிகள் பட்டாசு வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் புஸ்வானம் பற்ற வைக்கும்போது, முகத்தை அருகில் கொண்டு செல்லாமல் தூரத்தில் நின்று வைக்க வேண்டும்; மத்தாப்பு வைத்து அது எரிந்த பிறகு அதைக் கீழே போடாமல் தண்ணீரில் போட வேண்டும்; காலியான இடத்தில் ராக்கெட் விட வேண்டும்.

கைகளில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது. பட்டாசு வெடிக்கும் போது, பாலிஸ்டர் மற்றும் நைலான் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது. பட்டாசுகள் வெடிக்கும் பொழுது அருகில் தண்ணீர் வைக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக, கல்லூரி முதல்வர் எஸ். விஜயகுமார் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்