ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
X

குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் இதர தீ தடுப்பு முறைகள் எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில், பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் தீபாவளி பட்டாசு பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் இதர தீ தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் முதல்வர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் வீடுகள் தொழிற்சாலைகள்,மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளில் தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்தும் அதை முழுமையாக அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகை காலங்களில் மாணவ மாணவிகள் பட்டாசு வெடிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் புஸ்வானம் பற்ற வைக்கும்போது முகத்தை அருகில் கொண்டு செல்லாமல் தூரத்தில் நின்று வைக்க வேண்டும் எனவும் மத்தாப்பு வைத்து அது எரிந்த பிறகு அதைக் கீழே போடாமல் தண்ணீரில் போடவும் ராக்கெட் விடும்போது அருகில் குடிசை வீடுகள் வைக்கோல் கட்டுகள் இல்லாத காலியான பகுதிகளில் வைக்கவும்.

பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் கைகளில் வைத்து வெடிக்க கூடாது என்றும், பாலிஸ்டர் மற்றும் நைலான் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் பட்டாசுகள் வெடிக்கும் பொழுது அருகில் தண்ணீர் வைக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் அருள்குமார், சக்திவேல், கார்த்திக், ஜெகதீஸ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!