குமாரபாளையம் பெயிண்ட் கடையில் தீ விபத்து

குமாரபாளையம் பெயிண்ட்  கடையில் தீ விபத்து
X

தீயை போராடி அணைத்த தீயணைப்பு போராட்ட வீரர்கள்.

சங்ககிரி சிமெண்ட் ஆலை முன்பு உள்ள பெயின்ட் மற்றும் எலெக்ட்ரிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே சங்ககிரி சிமெண்ட் ஆலை முன்பு பெயின்ட் மற்றும் எலெக்ட்ரிகல் கடை ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இதில் டியூப் லைட் எரிகிறதா என பரிசோத்தித்து வாடிக்கையாளர்களுக்கு தருவது வழக்கம். அது போல் ஒரு டியூப் லைட் பரிசோதனை செய்த போது தீப்பொறி எழுந்ததாக கூறபடுகிறது. இதனால் அருகில் உள்ள ஆயில், பெயின்ட் ஆகியவற்றில் தீப்பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த பெயின்ட் மற்றும் ஆயில் கேங்களுக்கும் தீ பரவியது. இந்த தீ அருகில் இருந்த சைக்கிள் கடையிலும் பரவியது. இது குறித்து தகவலறிந்த சங்ககிரி, குமாரபாளையம், வெப்படை ஆகிய மூன்று ஊர்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!