குமாரபாளையம் உணவகத்தில் தீ விபத்து - பரபரப்பு
உணவகத்தின் உள்ளே பற்றி எரியும் நெருப்பை,அணைக்கும் முயற்சியில்,குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காலனி பஸ் நிறுத்தம் அருகில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் புவனேஸ்வரன், 25. காலை இந்த கடையில் இருந்து புகை வந்தது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தந்தனர்.
இதுகுறித்து, குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் வந்து, ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதில், டி.வி., யூ.பி.எஸ். உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின.
தீயில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு 50 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu