பட்டாசு வெடிப்பது குறித்து அரசு பள்ளியில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்

பட்டாசு வெடிப்பது குறித்து  அரசு பள்ளியில்  தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்
X

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து குமாரபாளையம் அரசு பள்ளியில் தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் வெடித்து கொண்டாடும் நேரத்தில், எதிர்பாராமல் தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் அரசு பள்ளிகளில் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கமளித்தனர். குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில், தீயணைப்பு துறை அலுவலர் ஜெயச்சந்திரன் மாணவர்களிடம் பேசியதாவது:

பட்டாசுகள் வெடிக்கும் பொழுது எவ்வளவு தூரமாக இருந்து நாம் பட்டாசுகளுக்கு நெருப்பு வைக்க வேண்டும், வெடி போன்ற பட்டாசுகள் வைக்கும் போது அவற்றின் திரிகளை கிள்ளிவிட்டு வைக்க வேண்டும், மத்தாப்பு வைக்கும் பொழுது பாதுகாப்பாக வைக்க வேண்டும், பட்டாசுகள் வெடிக்கும் பொழுது அணியும் ஆடைகள் பெரும்பாலும் பருத்தி துணிகளாக இருந்தால் எளிதில் தீ பிடிக்காது, அவ்வாறு பிடித்தாலும் உடனடியாக அணைத்து விடலாம், பாலிஸ்டர் போன்ற ஆடைகளை அணிந்து பட்டாசை வெடிக்கும் பொழுது எதிர்பாராமல் ஏற்படும் காயங்களுடன் ஆடைகளும் ஒட்டிக்கொண்டு காயங்களை பெரிது படுத்தி விடும். ஆகவே பாலியஸ்டர் ஆடைகள் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்

Tags

Next Story